Monday, May 26, 2014

Marriage CD

மனைவி :இந்த காலத்து ஆம்பளைங்க திருமண நாளைக்கூட மறந்துடறப்ப நீங்க இப்பவும் நம்ம கல்யாண சி டி யை திரும்ப திரும்ப போட்டு பாக்கறீங்களே, உங்களால நம்ம கல்யாண நாளை மறக்கவே முடியலையா மாமா..?

கணவன் ; இவ யாருடா நடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு..! நான் கடைசியா சிரிச்ச அந்த நாளை போட்டு பார்த்து ஆறுதல் பட்டுக்கிட்டிருக்கேன­். இதுல கல்யாண நாளை சொல்லி கடுப்பை கிளப்பிக்கிட்டு....!

Funny LKG Boy

எல்.கே.ஜி.
பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா

அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா

எல்.கே.ஜி.
பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….

Vijay TV Vs Modi's Function

இதே பதவியேற்பு விழாவை விஜய் டிவி கவர் பண்ணிருந்தா,

மோடிக்கு சூப்பர் சிங்கர்ஸ் வெச்சு ஓப்பனிங் சாங் பாடிருப்பாங்க..
கோபிநாத் மேடைல இருந்து ஒவ்வொரு பேரா கூப்பிட்டிருப்பாரு..
நடுவுல சிவ கார்த்திகேயன் வந்து மன்மோகன் மாதிரி மிமிக்ரி பண்ணிருப்பாரு..
டிடி வந்து மோடிய கட்டிப்புடிச்சிருக்கும், ராகுலையும் சம்பந்தமே இல்லாம SO SWEET, IAM HONOREDனு எதாச்சு சொல்லி எதாவது பண்ணிருக்கும்..
மோடி பதவியேற்கும்போது கேமரா அவருக்கு ஸூம் இன் போய், ரஜினி பாட்டு ஓடி, ராகுல், சோனியாவ ஸ்லோ மோஷன்ல ப்ளேக் அண்ட் ஒயிட்ல காமிச்சு, சோகமான மியூசிக் போட்டு, அதுக்கு வாய்ஸ் ஓவர் குடுத்து, பழைய காங்கிரஸ் பதவி கால வீடியோவ எல்லாம் ரீகேப்னு ஓட்டி காமிச்சு, நீங்க எப்டி ஃபீல் பண்றீங்கன்னு கூட்டத்துல யாரயாவது பேச வெச்சு.....

அட சே.. நல்ல சான்ஸ் வேஸ்ட் பண்டானுங்க !!!

பிறந்த வீடு புகுந்த வீடு - பெரிய வீடு சின்ன வீடு