Thursday, July 10, 2014

சிரிக்க மட்டும்


ஒரு சொகுசு கப்பலில் அமெரிக்க நாட்டு காரன் ,ரஷ்யா நாட்டு காரன் , சீனா நாட்டு காரன் அப்புறம் நம்பாளு இந்திய நாட்டு காரன் பயணம் செய்தார்கள் . தீடிரென்று கப்பலுக்குள் விரிசல் ஏற்பட்டு நீர் புக ஆரம்பித்தது ,,கப்பலின் கேப்டன் கப்பலின் சுமை குறைக்க ஒரு யோசனை சொன்னார் , உங்களிடம் தேவை இல்லாத பொருட்கள் அனைத்தையும் தூக்கி கடலில் எரியுமாறு கூறினார்
அமெரிக்க நாட்டு காரன் அவன் கொண்டு வந்த மூட்டை மூட்டையான பணத்தினை தூக்கி எறிந்தான்
கப்பலின் கேப்டன் என்னையா கஷ்ட பட்டு சம்பாரிச்ச பணத்தை தூக்கி போடுட்ட
அமெரிக்க காரன் நான் இந்த பணத்தை 15 வருசத்துல சம்பாதிபென்னு சொன்னான்
ரஷ்ய நாட்டு காரன் தான் கொண்டு வந்த ஆயுதங்களை தூக்கி போட்டான்.
கப்பலின் கேப்டன் என்னையா கண்டு புடித்த ஆயுதங்களை தூக்கி போட்டுட
ரஷ்ய நாட்டு காரன் இதை நான் 10 வருசத்துல சம்பாதிடுவன் சொன்னான்
சீன நாட்டு காரன் தான் கொண்டு வந்த மின் பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தான்
கேப்டன் ஏன்யா என்று கேட்டான்
சீன நாட்டு காரன் இதை நான் 5 வருடத்தில் சம்பாதிவிடுவன் என்று கூறினான்
நம்ப ஆளு இந்திய நாட்டு காரன் துரு துறுன்னு முழிச்சி சுத்தி பார்தான் படால்னு பக்கதுல இருந்த தன் மகனை தூக்கி கடலில் எறிந்தான்
கேப்டன் யோவ் என்னயா உனக்கு அறிவு இல்லை உன் மகனையே தூக்கி கடல்ல போட்டுட
நம்ப ஆளு இந்திய நாட்டு காரன் இதை நான் 10 மாசத்துலயே உருவாகிடுவேணு சொன்னான்

Drunk and Drive

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.
போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"
அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."
மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."
போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."
மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"
போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."
மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"
அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."
போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"
மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."
ஆஹா செத்தாண்டா சேகரு..!!!!