Monday, May 26, 2014

Vijay TV Vs Modi's Function

இதே பதவியேற்பு விழாவை விஜய் டிவி கவர் பண்ணிருந்தா,

மோடிக்கு சூப்பர் சிங்கர்ஸ் வெச்சு ஓப்பனிங் சாங் பாடிருப்பாங்க..
கோபிநாத் மேடைல இருந்து ஒவ்வொரு பேரா கூப்பிட்டிருப்பாரு..
நடுவுல சிவ கார்த்திகேயன் வந்து மன்மோகன் மாதிரி மிமிக்ரி பண்ணிருப்பாரு..
டிடி வந்து மோடிய கட்டிப்புடிச்சிருக்கும், ராகுலையும் சம்பந்தமே இல்லாம SO SWEET, IAM HONOREDனு எதாச்சு சொல்லி எதாவது பண்ணிருக்கும்..
மோடி பதவியேற்கும்போது கேமரா அவருக்கு ஸூம் இன் போய், ரஜினி பாட்டு ஓடி, ராகுல், சோனியாவ ஸ்லோ மோஷன்ல ப்ளேக் அண்ட் ஒயிட்ல காமிச்சு, சோகமான மியூசிக் போட்டு, அதுக்கு வாய்ஸ் ஓவர் குடுத்து, பழைய காங்கிரஸ் பதவி கால வீடியோவ எல்லாம் ரீகேப்னு ஓட்டி காமிச்சு, நீங்க எப்டி ஃபீல் பண்றீங்கன்னு கூட்டத்துல யாரயாவது பேச வெச்சு.....

அட சே.. நல்ல சான்ஸ் வேஸ்ட் பண்டானுங்க !!!