Wednesday, October 5, 2016

நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

அப்போல்லாவை பார்த்து கேட்கிறேன்..
நீ ஹாஸ்பிட்டல் நடத்துரியா இல்ல கொடநாடு எஸ்டேட் நடத்துரியா?..
என்னடா ஆச்சு எங்க அம்மாவுக்கு?..

காய்ச்சல்னு உங்கிட்ட வந்தவங்களை நீ என்ன பண்ணிருக்கனும்..
இரண்டு ஊசியையும்,நாலு குளுகோஸையும் போட்டு இரண்டே நாள்ல வீட்டுக்கு அனுப்பிருக்கனும்..
அதுதானய்யா உலகவழக்கம்..

அதவிட்டுட்டு இப்படி பத்துநாள் கொண்டுபோய் வெச்சுக்கிட்டா தமிழ்நாட்டை யார் பாத்துக்கறது எங்களை எல்லாம் யார் காப்பாத்துறது..

இதே மாதிரி ஒரு சம்பவம் கலைஞருக்கு உடம்பு சரி இல்லாதப்பவும் நடந்தது..ஆனா உங்களுக்கெல்லாம் சாவே வராது இங்க வந்து எங்களை சாவடிக்காதீங்கனு ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிட்டான் அந்த ஹாஸ்பிட்டல்காரன்..அந்த தொழில் நாகரீகம்கூட தெரியவேணாம் உனக்கு..

இன்னும் இரண்டு நாட்களில் எங்கள் அம்மாவை நல்ல முறையில் டிஸ்சார்ஜ் செய்யவில்லை என்றால் அப்போல்லோ ஓனருக்கு பில்லி சூனியம் வைக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்......