Tuesday, October 18, 2016

ஆற்றில் தத்தளித்த பயிற்சியாளர்... காப்பாற்ற ஓடோடி வந்த யானையின் நெகிழ்ச்சி தருணம்!...

ஓடும் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த தன்னுடைய பயிற்சியாளரை பெண் யானை ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இங்கு Kham Lha என்னும் ஐந்து வயதான பெண் யானை உள்ளது.
அந்த யானைக்கு பயிற்சியாளராக Darrick Thomson (42) என்பவர் உள்ளார். அந்த சரணாலயத்தை சுற்றி உள்ள ஆற்றில் Darrick குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்குவது போன்ற செய்கையை செய்ய கரையில் இருந்த Kham யானை உடனே அவரை நோக்கி ஓடி தன் தும்பிக்கையால் அவரை மீட்டது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் விடப்பட்டுள்ளது.
இது பற்றி Darrick கூறுகையில், நான் அந்த யானையின் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளேன். அதே போல யானையும் என் மீது அன்பு வைத்திருக்கிறதா என பார்க்கவே நீரில் மூழ்குவது போல நடித்தேன்.
அது உடனே என்னை ஓடி வந்து காப்பாற்றியது என் மீது யானை வைத்துள்ள பாசத்தை காட்டுவதாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.