Tuesday, May 6, 2014

Physically getting week man and his wife meets Doctor

திருமணமானதில் இருந்து அந்த இளைஞன் நாளுக்கு நாள் மெலிந்து போய் கொண்டிருந்தான். ஆங்கில் வைத்தியம் தவிர அனைத்து விதமான மருத்துவ முறைகளை மேற்கொண்ட பிறகும் உடல் தேறியபாடில்லை. வேறு வழி இல்லாமல் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
அவனை பரிசோதித்தார் பிரபல மருத்தவர். பரிசோதனை முடிந்ததும் அவனை வெளியே அனுப்பி விட்டு அவனின் மனைவியிடம் சொன்னார்.
"நீங்கள் பயப்படுகிற மாதிரி உடலில் எந்தவித கோளாறுகளும் குறைபாடுகளும் இல்லை. நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். இன்றிலிருந்து உங்கள் வீட்டை நீங்கள் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் உங்கள் கணவருக்கு சுவையான சிற்றுண்டி தரவேண்டும். எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேச வேண்டும். உங்கள் மனநிலை சிறிது கூட கோபம் பக்கம் தாவக் கூடாது.
அதே போல தொலைக்காட்சி நாடகத் தொடர்களைப் பார்க்காதீர்கள். புதிய துணிமணிகள் வேண்டும் அழகு சாதனப் பொருட்கள் வேண்டும் என அவரை நச்சரிக்காதீர்கள். குறிப்பாக நகை பற்றிய பேச்சே எடுக்க கூடாது. இதே போன்று ஒரு வருடம் செய்தீர்களானால் அவர் நன்றாகத் தேறி விடுவார்"
மௌனமாக எழுந்த மனைவி மருத்தவருக்குரிய தொகையை கொடுத்து விட்டு கணவனுடன் வெளியேறினாள். வழியில் கணவன் கேட்டான்.
"நீண்ட நேரமாக மருத்துவரிடம் எனது உடல் தேறுவது குறித்து கேட்டு கொண்டிருந்தாயே! அவர் என்ன சொன்னார்?"
மனைவி சொன்னாள் "நீங்கள் தேறுவதற்கு எந்த வித வாய்ப்பும் வழியும் இல்லையாம்....!"